Posts

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

இந்த இதமான மண்ணை , ஆகாயத்தினை எப்படி வாங்கோ விற்கவோ முடியும் ? இது உண்மையில் எங்களிற்கு வியப்பாக உள்ளது. இந்த இதமான காற்றும் , மின்னித்தெறிக்கின்ற நீரும் எங்களிற்கு மட்டும் சொந்தமில்லை. எங்களிற்கு மட்டும் சொந்தமில்லாத ஒன்றை எவ்வாறு நாங்கள் விற்கமுடியும். எமது நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எமது மக்களால் புனிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மண் புனிதமானது. எமது முன்னோர்களின் ஒப்புயர்வற்ற தியாகத்தாலும் , உழைப்பாலும் எமக்கு வழங்கப்பட்டது. இங்குள்ள ஆறுகளில் ஓடுகின்ற நீர் வெறும் நீரல்ல எமது முன்னோர்களின் குருதி. நாங்கள் இந்த நிலங்களை உங்களிற்கு (அமெரிக்க வெள்ளையர்களுக்கு) விற்றால் இந்த மண்ணின் புனித தன்மையினை நீங்கள் உங்கள் குழந்தைகளிற்கு கற்பிக்க வேண்டும். இங்கு ஓடுகின்ற ஆறுகளிலுள்ள நீர் எமது முன்னோர்களின் ஞாபகங்களை சுமந்த வண்ணமே செல்கின்றன. இந்த ஓடும் நீரின் ஓசை எமது பாட்டனாரின் குரல். இந்த ஆறுகள் எமது சகோதரர்கள் , இவைகள் எமது தாகத்தினை தீர்கின்றன. இந்த ஆறுகளிலே எமது வள்ளங்கள் சுமக்கப்படுகின்றன. எமது குழந்தைகளிற்கு நீரினை வழங்குவதும் இவைகளே. இப்படிப்பட நிலத்தினை நாங்கள் உங்களிற்கு தந்த